Monday, July 25, 2011

காதலின் மகத்துவம்

இதய மாற்று சிகிச்சையை
இங்கு கண்டெடுத்தது
சில ஆண்டுகளுக்கு முன்னே.
அடே மனிதா, இவ் சிகிச்சையைகாதல்

அன்றே அறிந்து விட்டது
காதலியின் தங்கையை கண்டதும்.
இன்னும் நீ அறியவில்லையோ
காதலின் மகத்துவத்தை...

ஆன்மா

வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்

பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்

தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்

வாழ்கை

வாழ்வதற்கு ஆசை இல்லை
என்னக்கு வந்தாய்
துணையாக
புது உலகத்தை தந்தாய்
இன்று வாழ்கிறேன்
உன்னை யாரென்று
காணமல்!!!!!!

Wednesday, July 20, 2011

எங்கே நீ

ஒருவேளை இன்று நீ
ஊமையாகி போகலாம்
ஒரு நாள் என்னோடு
நீ பேச வருவாய்..

அன்று நான்
இங்கு உறங்கிகொண்டிருபேன்.
இன்று வந்து என் மார்பில்
சாய்ந்தால் உன்னை அணைக்க
என் கைகள் இருக்கும் இல்லையேல்
நீ அழும்போது உன் கண்ணீர்
துடைக்க கூட நான்.... ???

முதல் காதல்

முதல் காதல்
உன்னிடம் மட்டும் தான்
இன்னொரு இதயம் கேட்டாலும்
அடங்கவில்லை என் மனது
உன் நினைவுகளை விட்டு...

வாழ்க்கை

காதல் கருவாய் எனக்கு அவள்,
கற்பனை காதாலாய் அவளுக்கு நான்,
அவள் கற்பனை கலைந்தது,
என் காதலெனும் கருவறை வாழ்க்கை அழிந்தது....................

Tuesday, July 19, 2011

மரணம் தாண்டியும் வாழும் காதல்…!

பெயர்ந்து விழுந்த ” இரு ” செதில்கள் …
பாழடைந்த கல்லறை என்றே -
பலருக்குத் தெரியும்…..

உனக்காக - நான்…
கண் திறந்து காத்திருப்பது
எனக்கு மட்டுமே புரியும் ….!

கணவனோடாவது வருவாயா …. ?
கண்ணீர் சிந்த - என்
கல்லறைக்கு ….!?

காதலின் மொழி

கண்கள் பேசும் மொழி மௌனம்

செவ்விதழ் பேசும் மொழி சிரிப்பு

விரல்கள் பேசும் மொழி கவிதை

கால்கள் பேசும் மொழி கோலம்

இதயம் பேசும் மொழி காதல்

காதலன்

ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடன்
அலைந்து கொண்டிருக்கிறேன்… — அதைத்தவிர
வேறென்ன செய்ய முடியும் என்னால்…?
காற்றல்ல …. காதலன்…!

Friday, July 15, 2011

காதலர்களின் சின்னம்.....

மண்ணுக்குள்

மறைந்த பின்பும் வாழும்

காதலர்களின் சின்னம்.....

"தாஜ்மஹால்"

வெற்றி என்ன ..? தோல்வி என்ன...?

காதலுக்காக மட்டுமே

கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை

காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...

சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?

இதுவும் நம் காதலுக்கு (.. மன்னிக்கவும்..)...

இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

காதல்

சரிதானா இது..?

பலவீனமான ஒரு கணத்தில்
உன் இடையைச் சுற்றி வளைத்தேன் நான்...

உண்மையான காதல்

உண்மையான காதல்
நாம் சுற்றித்திரிந்த ஒரு பொற்காலத்தில்
மழையில் நனைந்து உன் ஆடை
உன் உடலோடு ஒட்டிக்கொண்டது..

அனைவரின் பார்வைக்கும்
இரையாகிறேன் என்று அழுதாய் நீ..

புரியாத காதல்.,,

உனக்காக நான் இல்லை என்றாய்.., அப்பொழுது புரியவில்லை.இப்பொழுது தான் புரிகிறது எனக்காக நீ இல்லை என்று ............

Sunday, July 10, 2011

மாறாது என் காதல்

வீசி செல்லும் காற்று
வீழ்ந்த பின்பும்...
கவி சொல்லும் இதயம்
இறந்த பின்பும்..

உடல் கொண்ட
உயிரது உறங்கிய பின்பும்...
மனித இனம்
இது மரித்த பின்பும்...
மனம் கொண்ட என் காதல்
ஒரு போதும் மாறாது...
என்னைவிட்டு விலகி செல்லும்
பாடசாலை நாட்கள்,
பதினைந்து எமக்கு ராசியானதோ?
இல்லையோ? தெரியவில்லை

பதினைந்து பட்டாம்பூச்சி
நெஞ்சங்களை ராசியாக்கியது
இந்த பள்ளி சோலைவனம் தான்
நாளை நம் பிரிவால்
இது பாலைவனமாகிவிடுமோ?
என்ற நினைவே அலைகிறது என் மனதில்!
நிச்சயமாக நேற்றும் இன்றும் என்றும்
சோலை வனமாகவே
இருக்கும் எங்கள் பள்ளி நினைவுகள்!

நான் உனக்காக!

கவிதை எழுத நேரமில்லை
நான் காட்டிலும் இல்லை
நிம்மதியான உலகம் தேடினேன்
இருப்பதாக அறியவில்லை
ஆழ்ந்த உறக்கம் கேட்டேன்
அனுமதி இல்லை
சிரிக்க நினைக்கிறேன் முடியவில்லை
அழ நினைக்கிறேன் முடியவில்லை
உலகத்தை விரும்பவில்லை
அதை விரும்ப வைப்பது உன்னிடத்தில் இருக்கிறது
நீ எனக்காக வாழும்வரை நான் உனக்காக!

Tuesday, July 5, 2011

காதலின் வலி

மரணமும் தர
மறக்கும் வலியை
மறவாமல்
தந்துவிடும் காதல்

மனதை பரிமாற்றும் முன்
மண்டியிட்டு
தொழுதுகொள்
மனதில் தோன்றும் காதல்
மடியக்கூடாது என்று...

தொலைந்த இதயம் பேசுகிறது

நீர் இன்றி மீன் வாழும் என்றால்
உயிர் இன்றி உடலும் கூட வாழும் என்றால்
உன் நினைவு இன்றி நான் வாழ்வது
சில சமயம் சாத்தியம்தான்...

உயிர் அற்ற ஜீவனானது என் காதல்
உயிர் உள்ள உண்மை
உணர்வானது உன் நினைவுகள்...
கால் போன பாதையில் போன என்னை
காதல் எனும் பாதைக்கு இழுத்து
கண்ணீர் எனும்
கடலுக்குள் தள்ளிச்சென்றவளே
புது உறவோடு தொலைதூரம் நீ சென்றாலும்
தொலையாத நிம்மதியுடன் நீ வாழ
தொலைந்து போன என்
இதயத்தின் வாழ்த்துக்கள்.

கவிதை

என்றோ ஒரு நாள்
மறந்த கவிதை அதை இன்று ...
நினைத்திருக்கவே கூடாத கவிதை.

எழுத நினைக்கையில் நிச்சயம்
எழுத்துப் பிழைகளாகவே
வரும் கவிதை

இருந்தும் இப்போது
எழுத தூண்டும் கவிதை
இதில் எது நடந்திருக்க வேண்டாம்
அல்லது எது நடந்திருக்க வேண்டும்..?