Wednesday, June 29, 2011

அவளின் நினைவு

உருகும் மெழுகின்
மரணம் வரைக்கும்தான்
எரியும் அந்த தீ...
உயிருள்ள அவளின்
நினைவு வரைக்கும்தான்
துடிக்கும் என் இதயம்..

என்னருகில் இல்லை

காதலியே உன்னை,
நினைக்காத நாளும் இல்லை..
மறந்த நொடியும் இல்லை..
வரையாத காகிதமும் இல்லை..
எழுதாத காவியமும் இல்லை.. ஆனால்
இப்போது என்னருகில்
நீயும் இல்லை!!!

ஏக்கம்

ஏக்கம் அவள் வரவுக்காய் காத்திருக்கும்
ஓர் உயிருள்ள ஜீவன் நான்
அவளை பார்த்துவிடத் துடிக்கும் கண்கள்
அவள் பேச்சொலிக்காய் ஏங்கும் செவிகள்

அவளிடம் பேசிவிடத் துடிக்கும் உதடு
அவள் சுவாசித்த காற்றை
சுவாசிக்க நினைக்கும் இதயம்
அவளை தொட்டு விட நினைக்கும் விரல்கள்
அவளை கடந்து விட நினைக்கும் கால்கள்
அவள் உதடு பதிய ஏங்கும் கன்னம்
அவள் சுவடு பதிய ஏங்கும் இல்லம்
இவை யாவற்றிலும்
ஓர் உணர்வு கலந்த ஏக்கம்

Saturday, June 25, 2011

உன்னை கண்ட போதே

முதல் முறை உன்னை கண்ட போதே - என்னை
முழுசாய் தொலைத்து விட்டேன் .
வேர்களை மறைக்கும் தாவரம் போல - மனதை
மறைத்து விட்டேன்.

காதலின் வாசலை அடைந்து விட்டேன்
காதலி வரும் வரை காத்திருந்தேன்
நீயும் வந்தாய்
என்றும் நாம் வாழ்வோம் காலம் முழுவதும்...

அவளின் நினைவு

உருகும் மெழுகின்
மரணம் வரைக்கும்தான்
எரியும் அந்த தீ...
உயிருள்ள அவளின்
நினைவு வரைக்கும்தான்
துடிக்கும் என் இதயம்..

Thursday, June 23, 2011

காதலிக்கிறேன்

உன்னை பார்த்து
உன் அழகில் விழுந்து
உன் வார்த்தையில் மயங்கி
அந்த போதையில் எழும்
உணர்ச்சியை விட

உன்னை பார்க்காமல்
உன்னிடம் பேசாமல்
உன்னை பற்றி
கேள்வி பட்டு கொண்டு
வரும் நினைவை
காதலிக்கிறேன்...

என்னருகில் நீ வேண்டும்

என் உசிராய் என்னருகில் நீ வேண்டும்
என் உறவாய் என்னருகில் நீ வேண்டும்
என் தாயாக என்னருகில் நீ வேண்டும்
என் தோழனாய் என்னருகில் நீ வேண்டும்
என்றும் என்னவனாய் என்னருகில் நீ வேண்டும்

வாழ்க்கையே போராட்டம்

காதலே
நீ யே வாழ்க்கையல்ல
வாழ்க்கையே போராட்டம்
போராட்டமே நீயானால்
வாழ்க்கை வெறுமையாய்
வெறுத்து போவதேன்

காதலே
உண்மையே நீயானால் வந்துவிடு
போலியே நீயானால் விட்டுவிடு
காதலே வேண்டாம் எமக்கு...

கல்லறை காற்று

காலங்கள் கடந்த போதும்
கண்ணீர் துளி மரித்த போதும்
கடல் நீர் வற்றிய போதும்
கார் மேகம் தீர்ந்த போதும்

கனவுகள் கலைந்த போதும்
கவலைகள் சுமந்த போதும்
கஷ்டங்கள் நிறைந்த போதும்
கற்பனைகள் இறந்த போதும்

ஓடும் நதிகள் நின்ற போதும்
ஓயாத அலைகள் ஓய்ந்த போதும்
ஓவியங்கள் முடிந்த போதும்
ஓடும் உயிர்கள் உறைந்த போதும்

உறவுகள் ஊனமாகிய போதும்
உயிர் மூச்சு உறைந்த போதும்
உள்ளம் கொண்ட நட்பு மாறிப்போன போதும்
உண்மை அன்பு உதறிப்போன போதும்

இவை அனைத்தும் மாய்ந்து
மறைந்து போன போதும்
நீ என்னிடம் விட்டு சென்ற
உன் நினைவுகள் மாத்திரம் ஒரு போதும் மாயதம்மா

என் உயிர் வாழும் வரை என் இதய துடிப்பாக
உன் நினைவுகள் வாழும்
என் உயிர் பிரிந்த பிறகு என் கல்லறையை சுற்றி
உன் நினைவுகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
என் கல்லறை காற்றாக...

என்னவளுக்கே சமர்ப்பணம் என் உயிர்

இன்னும் எனக்கு இந்த உலகில்
பல கோடி ஜென்மம் வேண்டும்
அதில் அணைத்து ஜென்மத்திலும்
என்னவளுக்ககா என் உயிரை
என்னவள் மடியில் விடவேண்டும்

இறைவனே இந்த ஜென்மம் முழுக்க
தவம் இருந்துவிடுகிறேன் தந்துவிடு
இந்த வரத்தை...

Sunday, June 19, 2011

நந்தவனத்தில் ஓர் காதல் ஆண்டி

ஆத்தாடி......அம்மாடி......
கூத்தாடி.......கோபமாடி......
மேல்மாடி எனக்கு காலியடி...
இதயத்திலும் மனதிலும் நீ வந்ததாலடி..
இது நீ அறியாததாடி? மறந்தாயோ ஏனடி?
நான் உன்னுள் இருக்கும் மெல்லிய பூ தாண்டி...
வாசமாய் சுவாசமாய் காக்கும் கவசமாய் காதல் தாண்டி...

ஹூம் கோபம் வந்தா என்னெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு?

உன்னை நினைத்து இறப்பேன்...

நீ எனை பிரிந்து சென்றாலும்

என்றும் உன்னை நினைத்து இருப்பேன்..

இருக்கும் வரை

உன்னை நினைத்து இறப்பேன்...

என் காதலை உணர்வாயோ?...

உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்,
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல்.

உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்,
உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.

உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்,
உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.

உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்,
உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்,
உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.
உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும் நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல்.

நுரையீரலின் இதயக் காதல்...

இருப்பதோ இரண்டு,
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?
இளகுவது மனம் என்பர் அறியாதோர்,
இளகியது அதனினும் நீயன்றோ,
இதயத்துக்கு இடம் தர வேண்டி,
இடதாகிய நீ வலதைக் காட்டிலும் சிரிதாமே?
இதயத்துக்கு இடம் தந்த இளகிய இட நுரையீரலே நீ வாழ்க,
இதயத்தை வாழ்வித்தாய் நீ - அதை வாழ்விப்பது காதல்,
இடர்கள் களைந்து காதல் வாழ்ந்திருக்கும் வரை,
இட நுரையீரலே நீயும் வாழ்ந்திருப்பாய்,
இதயத்தை நீ காதலிப்பது தெரிகிறது, வாழ்க உன் காதல்,
இனிதாய் சிறக்கட்டும் உறுப்புகளுக்குள் காதல், உறவுகளுக்குள் காதல்...

காதலின் வாழ்வுதனை காமம் கவ்வும் காதலே வெல்லும்...

காதல் வந்தபின் காமமா?
காமம் வந்தபின் காதலா?
காதலில்லா காமம் இல்லை,
காமம் இல்லா காதலும் இல்லை,
காதல் மெய் என உளம் உணர்கையில்,
காமத்தை வெல்வது உளம் உணர்ந்த மெய்யான காதலே,
காதல் மெய்யாகையில் அதுவே மெய்ஞான காதலாகிறது,
காதலின் வாழ்வுதனை காமம் கவ்வும் காதலே வெல்லும்

காதலுக்கில்லை தாழ்மை நிலை

யாரென்று தெரியாமல்
தனியாக ஒருத்தி
ஒற்றையடிப் பாதையிலே
ஓயாது நடந்திருந்தாள்.

கிழியப் பட்ட ரவுக்கையில்
மின்னும் முதுகு
பின் வாங்கும் என் கண்கள்
வெளிச்சத்தைக் கிழித்தது.

பார்வை கீழிறங்கி
பாதத்தைக் தொட
பரிதாபம் என்ன சொல்வேன்
பாதணியும் அங்கில்லை.

நெருப்பாய்க் கொதிக்கும் வெயில்
நெருந்தி முள்ளுக் காடு
நெருங்க முடியா வேகத்தில்
நேர்த்தியானாள் அவள்.

எண்ணங்கள் வலை விரித்து
வட்டமிட்டுச் செல்கையிலே
மின்னல் வேகத்தில்
சுடு மணலைக்
கடந்து சென்றாள்

சூடான என் இதயம்
காதல் சுவடுகளைச் சுரண்ட
துரத்தி மறித்தது ஆசை
தூரே நின்று பார்த்ததினால்.

வானத்திரை மறிக்கும்
மேகமாய் வழி மறித்தேன்
மானை நடுங்கி நின்றாள்
நடை பாதையில்

தானே வெழுத்த வெயிலில்
வடியும் வெற்றிலைச் சாயம்
தலை சுற்றும் வாசத்தோடு
வாசகம் அவள் உரைத்தாள்.

புரியாத பாசையில் ஏதோ
புதிர் உரைக்க அ
றியாத மனசு அடம் பிடித்தது.

நிலையான வாழ்க்கை அவள்
நிழலாக மாற
அவள் இதயம் எ
னக்குள் துடித்தது

நடை பாதை பழகியது
கால்கள் பாதனியை வெறுத்தது
வறுமைக் கோட்டை
வயிறு உணர்ந்தது.

ஊர் வெறுத்தது
உறவுகள் துரத்தியது
வறுமை அழைத்தது
வாழ்க்கை நகைத்தது.

தாழ்த்தப் பட்ட சமுதாயத்தில்
தலை புகுத்தப் பட்டேன்
காதலிலும்
வெற்றி அடையப் பட்டேன்.

பிச்சை உலகை விலகாது
எச்சிலைக்காய்
வெள்ளைத்துணியில்
பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றேன்...

அழியாக்காதல்

வார்த்தைகளை தாண்டி
மௌனங்கலால் கருவாக்கபட்டு
விழிகளால் உருவாக்கப்பட்டு
இதயத்தினால் உயிர் கொடுக்கப்பட்டது
என் காதல்

என் வான்மதியே
உலகம் அழியும் காலம்
ஒன்று வந்த போதும்
ஒரு போதும் அழியாதுஉன்
மேல் நான் கொண்ட காதல்...

உன் அன்பு

உன் அன்பு...!
உன் அன்பு நெருப்பாய் இருந்தாலும்
அதை பற்றிப்பிடிப்பென்
நான் எரிந்து சாம்பலாகும்வரை
அப்போதாவது நீ
என்னை காதலிப்பாயா...

உன் நினைவுப்பூக்கள்

உன் சிரிப்பு ஒன்றே போதுமடி
சில ஜென்மங்கள் நான் வாழ்ந்திட
என் இளமைக்காலத்தை இழுத்து இதயத்தினுள்
புதைத்தவளே
இனிதொரு காலம் வருமோ
இனிமையாக நாம் வாழ

என் இதயத்துடிப்பு உன் பெயர்
சொல்லி உன்னை அழைக்கிறது
என் நாடித்துடிப்போ உன் பார்வை
இன்றி மெல்ல மெல்ல குறைகிறது
வான் மலை இன்றி
என் ரோஜாவும் மண்ணில் வாட
வான் மதியே உன் துணை இன்றி
என் இதயமும் நெஞ்சோடு தேய்கிறது.

காதல் எனும் பூந்தோட்டத்தில்
உதிரத பூக்களாக உன் நினைவுகள்
காதல் தோட்டத்தை
பாதுகாக்கும் காவலனாக நான்
கண்மணியே கலக்கம் வேண்டாம்
என் காதல் தோட்டத்தில்
பூத்திருக்கும் உன் நினைவுப்பூக்களை
யாரும் பறிக்கவும் தரமாட்டேன்
மண்ணோடு உதிர்ந்து போகவும் விடமாட்டேன்
என் கண்ணீரை தண்ணீராக ஊற்றி
உன் நினைவுகளுக்கு உயிர் கொடுப்பேன்
என் உயிர் வாழும் வரை

காலம் ஒன்று வந்து நம் காதலை
கை தட்டி அழைக்கும் வரை
காத்திருப்போம் கனவுகளோடு...

என்னிதயம் இக்கரையில் காதலுடன்

உயிரான வார்த்தை
உன் உதட்டில்
இருந்து விரிந்தால்
மட்டுமே
என் செவிக்கு
நம்பிக்கை
உண்டாகும்
அதுவரை
மன்னித்துக்கொள்

நீ தென்றல் காற்றை
தூதனுப்பி என்
உடல் ஊணமானது
போதும்
இதுக்கு மேல்
காயம் வர உடம்பில்
காயமில்லா
இடமே இல்லையடா

இன்னும் காதலுடன்
எவ்வளவு காலமென்றாலும்
என்னிதயம் காத்திருக்கும்
நீ மனம் மாறி காதலை
மீட்டெடுப்பாயோ
அறியாது என்னிதயம்

நம்ப வை உன்னிதயத்தை
தூதனுப்பி
அதே காதலுடன்
இக்கரையில் என்னிதயம்
காத்திருக்கு கண்ணீருடன்

கண்ணீர் தந்த காதலே! உனக்கு ஒரு நன்றி

நிலவு தூங்கும் நேரம் அது
உன் நினைவுகள் தூங்காத நெஞ்சம் இது
இதழ்கள் இல்லாத மலர் எது
நீ கொண்ட மனம் அது
நான் உணர்ந்த சுவர்க்கம் எது
உன்னோடு வாழ்ந்த நொடிகள் அது .....

வாழ்வோடு வந்த வசந்தம் நீ"
வாலிபத்தை வருத்தும் வலியும் நீ"
கண்ணோடு வாழ்ந்த கனவும் நீ "
கல்லறையை காட்டும் வழியும் நீ"
சொல்ல மறந்த சொந்தமும் நீ"
சொல்ல முடியாத சோகமும் நீ "

வார்த்தைகள் வீசிய உன் உள்ளத்துக்கு ஒரு நன்றி
வாழ மறுக்கும் என் இதயத்துக்கு ஒரு நன்றி
மறந்து போன உன் மனதுக்கு ஒரு நன்றி
மாலை சூடிய உன் கணவனுக்கு ஒரு நன்றி
காத்திருக்கும் என் கல்லறைக்கு ஒரு நன்றி
கண்ணீர் தந்த காதலே !உனக்கு ஒரு நன்றி ......

காதலே நீ தந்த கண்ணீர் போதும்
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
இப்போதைக்கு வழி தந்துவிடு என்னவளை
தொலைத்த என் இதயம் கல்லறை செல்ல வேண்டும் .

என் இதயத்திற்காக........

உன் பிரிவின் கவலையில்
நான் கரைந்திருக்க
என் விழிகள் சிந்தியன
பனித்துளிகளை
இறந்து போன என் இதயத்திற்காக..........

Sunday, June 12, 2011

நீ என்னிடம் அப்படி..?

நீ என்னிடம் அப்படி..?
உன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
காதினிக்கப் பேசுகிறாய்..!
அவர்களின் கன்னங்களைக் கிள்ளியபடி
கொஞ்சி மகிழ்கிறாய்..!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
பொறாமைதான் மிஞ்சுகிறது..!
நீ என்னிடம் அப்படி
கொஞ்சிப் பேச வில்லையே என்று..?

Monday, June 6, 2011