Sunday, June 19, 2011

காதலுக்கில்லை தாழ்மை நிலை

யாரென்று தெரியாமல்
தனியாக ஒருத்தி
ஒற்றையடிப் பாதையிலே
ஓயாது நடந்திருந்தாள்.

கிழியப் பட்ட ரவுக்கையில்
மின்னும் முதுகு
பின் வாங்கும் என் கண்கள்
வெளிச்சத்தைக் கிழித்தது.

பார்வை கீழிறங்கி
பாதத்தைக் தொட
பரிதாபம் என்ன சொல்வேன்
பாதணியும் அங்கில்லை.

நெருப்பாய்க் கொதிக்கும் வெயில்
நெருந்தி முள்ளுக் காடு
நெருங்க முடியா வேகத்தில்
நேர்த்தியானாள் அவள்.

எண்ணங்கள் வலை விரித்து
வட்டமிட்டுச் செல்கையிலே
மின்னல் வேகத்தில்
சுடு மணலைக்
கடந்து சென்றாள்

சூடான என் இதயம்
காதல் சுவடுகளைச் சுரண்ட
துரத்தி மறித்தது ஆசை
தூரே நின்று பார்த்ததினால்.

வானத்திரை மறிக்கும்
மேகமாய் வழி மறித்தேன்
மானை நடுங்கி நின்றாள்
நடை பாதையில்

தானே வெழுத்த வெயிலில்
வடியும் வெற்றிலைச் சாயம்
தலை சுற்றும் வாசத்தோடு
வாசகம் அவள் உரைத்தாள்.

புரியாத பாசையில் ஏதோ
புதிர் உரைக்க அ
றியாத மனசு அடம் பிடித்தது.

நிலையான வாழ்க்கை அவள்
நிழலாக மாற
அவள் இதயம் எ
னக்குள் துடித்தது

நடை பாதை பழகியது
கால்கள் பாதனியை வெறுத்தது
வறுமைக் கோட்டை
வயிறு உணர்ந்தது.

ஊர் வெறுத்தது
உறவுகள் துரத்தியது
வறுமை அழைத்தது
வாழ்க்கை நகைத்தது.

தாழ்த்தப் பட்ட சமுதாயத்தில்
தலை புகுத்தப் பட்டேன்
காதலிலும்
வெற்றி அடையப் பட்டேன்.

பிச்சை உலகை விலகாது
எச்சிலைக்காய்
வெள்ளைத்துணியில்
பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றேன்...

No comments: